127
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்பொழுது பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து நிலையில். வாரத்திற்கு இரண்டு நாட்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே திருவாரூர் – பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில். இன்று(14/10/2018) அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.