Saturday, November 2, 2024

பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?

spot_imgspot_imgspot_imgspot_img

குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான்.

உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. சிசுக் கொலையை நிறுத்தியது. கற்பழிப்பு போன்ற துஷ்பிரயோகங்களை துடைத்தெறிந்தது.

இவ்வாறு சரியான திசையில் சென்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை மீண்டும் ஷைத்தானிய, தஜ்ஜால் கூட்டங்கள் திசை மாற்றின.

உலகில் விஞ்ஞானத்தின் பெயரிலும் அறிவியலின் பெயரிலும் அநியாயங்களைக் கட்டவிழ்த்துவிட்டது. உலகின் ஒட்டுமொத்த வளங்களும் சுரண்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட கூட்டத்தின் கைகளுக்குள் முடக்கப்பட்டது.

ஏழை நாடுகள் ஏமாற்றப்பட்டு அதன் வளங்கள் சுரண்டப்பட்டன, சுரண்டப்பட்டுகின்றன. தமது வசமிருக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களினூடாக ஷைத்தானிய கூட்டம் மக்களை ஒரு திசையில் அழைத்துச் செல்கின்றது. இந்தத் திசையில் பயணிக்க மறுக்கும் கூட்டமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. அவர்கள் உருவாக்க விரும்பும் அழிவுக் கலாசாரத்தை ஆதரிக்காத அவர்கள் வகுக்கும் பாதையில் பயணிக்காத ஒரே காரணத்திற்காக முஸ்லிம் சமூகம் வஞ்சிக்கப்படுகின்றது. அதன் விளைவுகள்தான் முஸ்லிம் நாடுகளில் தீ மூட்டப்படுகின்றது. முஸ்லிம்கள் பற்றிய பகையுணர்வும் குரோதப் போக்கும் மக்கள் மனதில் விதைக்கப்படுகின்றது.

உலகை அழிக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகள் தமக்கு உடன்படாத இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதமாகவும், பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்தி வருகின்றன. இன்றைய உலகின் முதல் தர பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டது இஸ்லாத்தின் மீதாகும்.

இலட்சக்கணக்கான மனித உயிர்களைக் காவு கொண்டு உலகை அழிவின் விளிம்புவரை அழைத்துச் சென்ற முதலாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியவர்கள் யார்? இதே போன்று இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்து அழிவை விதைத்தவர்கள் யார்? முஸ்லிம்களா? அல்லவே!

அமெரிக்காவின் ஆதிக்குடிவாசிகளான செவ்விந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்களில் சுமார் ஒரு கோடிப் பேரைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகக் கொன்று குவித்தவர்கள் முஸ்லிம்கள் அல்லர்.

ஆபிரிக்காவை அடிமைப்படுத்தி, கோடிக்கணக்கானவர்களைக் கொடுமைப்படுத்தி கொன்று குவித்தவர்கள் யார்? முஸ்லிம்களா?

ஜப்பானில் அணுகுண்டை வீசி மனித இனத்தின் பேரழிவை ஏற்படுத்தி இயற்கை வளத்தை முற்றாக அழித்தொழித்தது முஸ்லிம்கள் அல்லர்.

இவ்வாறு உலகளவில் நடந்த கொடூரக் கொலைகள், மனித இன அழிப்புக்கள்,… என்பன வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டு முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இஸ்லாமிய மார்க்கம் ஒரு மாபெரும் பயங்கரவாதமாக சித்தரித்துக் காட்டப்படுகின்றது.

உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை உறிஞ்சி அங்கு வாழ்ந்த மக்களை ஈவிரக்கமற்ற அழிவுகளுக்குள்ளாக்கி வருபவர்கள் உலகில் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுவதில்லை. நன்றாக இருந்த ஆபரிக்கக் கண்டத்தை அழித்து அங்கு பட்டினிச் சாவுகளை உருவாக்கியவர்கள் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுவதில்லை.

மக்களின் உணவு, பானம், மருந்து.. என அனைத்திலும் விஷத்தைக் கலந்து அவற்றை விளம்பர யுக்தி மூலம் மக்கள் மத்தியில் திணித்து பணம் பறிப்பவர்கள் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுவதில்லை.

சுயநல அரசியல் ஆதாயத்திற்காக மத, இன மோதல்களை உருவாக்கி மக்களின் இரத்தத்தின் மீது தமது அரசியல் ஆதாயத்தை நிலைநிறுத்தி வருபவர்கள் பயகரவாதிகளாகப் பார்க்கப்படுவதில்லை.

இவ்வாறு மனித இன அழிவுகளை யாரோ உருவாக்க, பயங்கரவாதிகள் என்ற பட்டம் மட்டும் முஸ்லிம்களுக்கு சு+ட்டப்படுகின்றது.

முஸ்லிம்கள் மீது பயங்கரவாதப் பட்டத்தைச் சூட்டுவதற்காக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செப்டம்பர் 9/11 தாக்குதலை உருவாக்கி நடாத்தி தமது மக்களையே பலியாக்கியது. 9/11 தாக்குதல் முஸ்லிம்களால் நடாத்தப்படவில்லை என்பது ஆதாரபு+ர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதை வைத்து முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதக் குற்றம் நீக்கப்படவில்லை.

முஸ்லிம்கள் மீது பழி போடுவதற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் சொந்த நாட்டு மக்களையே அழித்தவர்கள் மீது இப்போது கூட அந்த நாட்டு மக்கள் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை.

9/11 தாக்குதலை வைத்து ஆப்கானும், ஈராக்கும் கருவறுக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுகின்றனர். இதுதான் இன்றைய உலகின் நிலை! மெல்ல மெல்ல இந்த உலகியல் போக்கில் இலங்கையும் பயணிக்கின்றது.

எந்தவித பயங்கரவாதச் செயற்பாட்டிலும் ஈடுபடாமலேயே முஸ்லிம்கள் மீது ‘பயங்கரவாதிகள்” எனப் பட்டம் சூட்டப்படுகின்றது.

எவ்வித இனவாத செயற்பாட்டிலும் ஈடுபடாமலேயே முஸ்லிம்கள் மீது இனவாதிகள் என சேறு பூசப்படுகின்றது.

எவ்வித அடிப்படைவாதச் செயற்பாட்டிலும் ஈடுபடாமலேயே அடிப்படைவாதிகள் எனத் தூற்றப்படுகின்றது.

முஸ்லிம்கள மீது இனவாத, மதவாத, பயங்கரவாதச் செயற்பாடுகளை நடாத்திவிட்டு அவர்களையே பயங்கரவாதிகள் என பட்டம் சூடும் நிலை இன்று இங்கே உருவாகியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக குழந்தை பெறுகின்றார்கள் என அவர்களைக் கொச்சைப்படுத்துகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்ளும் முஸ்லிம் பெண்களை மன ரீதியாகப் பாதிப்படையும் விதத்தில் தாதிகளும் மருத்துவர்களும் வழிநடாத்துகின்றனர். அவர்களது இளம் பெண்கள் அதிகம் குழந்தை பெறுவதை வெறுக்கின்றனர், அச்சம் கொள்கின்றனர். நாட்டில் தினமும் ஆயிரக்கணக்காக கருச்சிதைவுகள் இடம் பெற்று வருகின்றன. அரசே கர்ப்பத்தடை மாத்திரைகளையும் சாதனங்களையும் அங்கீகரித்துள்ளது. இத்தனைக்கும் மத்தியில் முஸ்லிம்கள் சிங்களப் பெண்கள் குழந்தை பெருவதை நிறுத்தக் கூடிய இரசாயனங்களைக் கலந்து சிங்கள மக்களின் இனப்பெருக்கத்தைக் குறைப்பதாக முஸ்லிம்கள் மீது அபாண்டம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறு சர்வதேச மட்டத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் பாவம் ஒரு பக்கம் இருக்க பழி நம் பக்கம் வீசப்படும் இந்த வினோத விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களுடன் அறிவுபூர்வமான பதில்களை பதிவுகளாக எதிர்காலச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வது எமது தார்மீகப் பொறுப்பாகும்.

முஸ்லிம்களின் கடந்த கால வரலாறு அவர்களது அறிவியல், அரசியல், பொருளியல் பங்களிப்புக்கள் என்பன எதிர் கால சந்ததிகளின் கைகளுக்குச் சென்றடைய வேண்டும். அதற்கான முயற்சிகளை இஸ்லாமிய அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும்.

எமது கடந்த கால வரலாறு சிதைக்கப்பட்டு நிகழ் காலம் சேறு பூசப்படுகின்றது. இது தொடர்ந்தால் எமது எதிர் கால சந்ததிகள் எதிரிகளுக்கு முன்னால் குற்ற உணர்வோடு குனிந்து நிற்கும் நிலை உருவாகும். எனவே, எதிர்கால சந்ததியினருக்கு நாம் குற்றமற்றவர்கள், இந்நாட்டு நலனுக்காக உழைத்தவர்கள், இது எமது சொந்த நாடு என்ற உணர்வை ஊட்ட வேண்டியுள்ளது.

எமது எதிர்காலம் வளம்பெற, இந்த வரலாற்றுக் கடமையை நாம் செய்தாக வேண்டிய கடப்பாடு உள்ளது. இது குறித்து இஸ்லாமிய அமைப்புக்கள், அறிஞர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

காணவில்லை : அதிரை யூசுஃப்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப்(வயது - 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு...

காவிரியில் கரைபுரண்டோடும் தண்ணீர் – பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுரை!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து...
spot_imgspot_imgspot_imgspot_img