பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு விரைவில் இரயில் வசதி வேண்டி விண்ணப்ப கடிதம் இன்று அனுப்பப்பட்டது.
அதில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளன. தை மாதம் பொங்கல் திருநாளில் காரைக்குடி-பட்டுக்கோட்டை-திருவாரூர் இரயில் சேவை துவங்கவேண்டும்.
மீண்டும் கம்பன் விரைவுஇரயில் வண்டியினை இயக்க வேண்டும், மயிலாடுதுறை-காரைக்குடி பாசஞ்சர் இரயிலை இயக்க வேண்டும்.
மன்னார்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் மன்னை விரைவு ரயிலுக்கு காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் ரயில் நிலையத்தில் இணையும் வகையில் ஓர் இணைப்பு விரைவு இரயிலும் , மன்னார்குடியிலிருந்து திருப்பதி,பகட்கி-கோத்தி செல்லும் விரைவு இரயில்களுக்கு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வழியாக இணைப்பு விரைவு இரயில்களை இயக்க வேண்டும்.
வட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வரை இந்த இரயில் பாதையில் இரயில்களை இயக்கவேண்டும்.
ஏழை, நடுத்தர மக்கள்,வயதான வர்கள், மகளிர்,பயன் படும் வகையில் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பாசஞ்சர் இரயில் களைஇயக்க வேண்டும்.
இந்த இரயில் பாதைக்கு கிழக்கு கடற்கரை இரயில் பாதை என்று பெயர் சூட்ட வேண்டும்.
மேலும் இவ்வழிதடத்தில் நாகூர், வேளாங்கன்னி,திருவாரூர், வேதாரண்யம், கோடியக்கரை அலையாத்தி காடுகள், தில்லை விளாகம் இராமர் கோயில், முத்துப்பேட்டை தர்கா, பட்டுக்கோட்டைக்கு அருகில் மனோரா, ஆவுடையார் கோவில், ஏர்வாடி தர்கா, காரைக்குடி அருகில் பிள்ளையார் பட்டி, செட்டிநாடு அரண்மனை கள் உள்ளன.
இப்பகுதியில் இருந்து 70-80 பேருந்து கள் தினசரி சென்னை க்கு செல்கிறது. இரயில் சேவை துவங்கி னால் 70% -80% பயணிகள் இரயில் பயணத்தை மேற்கொள்வதாலும், உப்பு, கருவாடு, தென்னை, வேளாண்மை இடுபொருட்கள், ஜவுளி போன்ற சரக்கு போக்குவரத்தினாலும் இரயில்வே துறைக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
எனவே சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, இராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, கேரள மாநிலப்பகுதிகளுக்கு இரயில் சேவையினை துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்