39
மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்(42), வியாபாரி இவர் வழக்கமாக அதிரை,முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று இரவு சுமார் 7மணியளவில் முத்துப்பேட்டை சாலையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தம்பிக்கோட்டை அருகே வந்துகொண்டிருந்த போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தலையில் தாக்கியதுடன் அவரிடமிருந்த பொருள்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த சிவக்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு அதிராம்பட்டினம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவரின் ஆலோசனை பிரகாரம், மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.