Home » அதிரையில் அதிகளவில் விற்பனையாகும் சுகாதாரமற்ற இட்லி மாவுகளை பறிமுதல் செய்ய வேண்டும்..!

அதிரையில் அதிகளவில் விற்பனையாகும் சுகாதாரமற்ற இட்லி மாவுகளை பறிமுதல் செய்ய வேண்டும்..!

0 comment

தென்னிந்தியாவின் பிரபல உணவு வகைகளில் இட்லி, தோசை முக்கிய இடம்பெற்றவை. வீடுகளில் அரைத்து சமைக்கப்பட்ட இட்லி மாவு, தற்போது அதிரை கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

முறையான அங்கீகாரம் பெற்ற மாவு பாக்கெட்களில் தயாரிப்பு நிறுவனம், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, தயாரிக்கப்பட்ட இடம் போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் அங்கீகாரம் பெறாத பாக்கெட்களில் தகவல்கள் இருக்காது. இது ஆபத்தானவை என்று அறிவுறுத்தப்படுகிறது.

மாவு தயாரிக்க அரிசி, உளுந்து, கிரைண்டர், தண்ணீர் உள்ளிட்டவை சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும்.

முறைகேடான வகையில் தயாரிக்கப்படும் மாவில், ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், பென்சாயில் கலக்கப்படுவதாக உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வருகின்றன.

தரம் குறைந்த மூலப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் மாவால், வயிற்று வலி, செரிமான கோளாறு, வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது.

மேலும் சுகாதாரமற்ற நீரால் தொற்று நோய்கள் உண்டாகும்.

மாவை புளிக்க வைக்க, செயற்கையாக ஈஸ்ட் பயன்படுத்தினால், உணவு விஷமாக மாறிவிடும். தரம் குறைந்த அரிசியை பயன்படுத்தினால், கல்லீரல் பாதிக்கப்படும்.

எனவே அதிரையர்கள் மற்றும் பொதுமக்கள் இட்லி மாவு வாங்கும் போது, தரமானதாக இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும்

மேலும் அதிராம்பட்டினம் சுகாதார அதிகாரி, இது குறித்து சிறப்பு கவனம் மேற்கொண்டு தரமற்ற முறையில் விற்பனைக்கு வரும் இட்லி மாவுகளை பறிமுதல் செய்வதுடன் அதிகப்படியான அபராதம் விதித்து மக்களை காக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter