62
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை விவமர்சியாக கொண்டாடப்பட்டது.
இதில் நேற்று வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை பண்டிகையில் பைக், கார் மட்டுமின்றி சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு கொண்டாடினர்.
அதைப்போல் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அதிரை ஓட்டுநர் சங்கம் சார்பில் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா சிங்கார வேலு நடுவராக பல்வேறு பேச்சாளர்கள் சிரிக்க வைத்து பட்டிமன்றதை நடத்தினர். இதை ஏராளமான பொது மக்கள் கலந்துக்கொண்டு கண்டு மகிழ்ந்தனர்.