113
கும்பகோணம்:
சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமகள் அழைப்பு நிகழ்ச்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு அனைத்தும் கார்களிலேயே நடைபெற்று வருகிறது.
இதற்கு மாற்றாக கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் திருமணதிற்காக நேற்று இரவு மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது. மணமக்கள் இருவரும் கம்ப்யூட்டர் பொறியாளர்களாக சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.
மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி வந்தார்.
சென்டை மேளம் முழங்க மணமக்கள் அழைப்பு நடைபெற்றது.