தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது.இந்நிலையில் பல பொதுமக்கள் தஞ்சையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காய்ச்சலை தடுக்க புதிய முயற்சியில் அதிரை தாஜீல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் 16 மற்றும்17வது வார்டுகளில் புதிதாக குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிரையில் நிழவும் சுகதார சீர்க்கேடு நிலைமையை கட்டு படுத்தும் வகையில் இந்த முயற்சியில் அசங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு இளைஞர்கள் மற்றும் அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தினரின் ஒரு முக்கிய வேண்டுகோள் :-
அதிரையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதில்லை.இதனால் டெங்கு காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இனிவரும் காலங்களில் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுமாறு அவர்கள் மக்களிடையே கேட்டுக்கொண்டனர்.