Home » அதிகாரத்தின் பலத்தை பெற்று சமூகத்தை பலப்படுத்துவோம்! அதிரை இலியாஸ் அழைப்பு!!

அதிகாரத்தின் பலத்தை பெற்று சமூகத்தை பலப்படுத்துவோம்! அதிரை இலியாஸ் அழைப்பு!!

by
0 comment

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் விடுத்திருக்கும் அழைப்பில், “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சியில் உள்ள ஜி கார்னரில் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

பசியற்ற இந்தியா பயமற்ற இந்தியாவை உருவாக்க கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தூய பணியாற்றி வரும் SDPI கட்சி அறிவித்துள்ள இந்த ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு என்பது ஒடுக்கப்பட்ட மற்றும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைய உள்ளது.

சுதந்திர போராட்ட களத்தில் தனது சதவிகித்திற்கும் அதிகமாக உயிர் தியாகம் செய்த சமூகம் இன்று அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத சூழலில் இந்தியாவில் வாழ்வது அரசியல் அதிகாரமின்மையினாலேயே என்பது தான் நிகழ்வு.

அதை மாற்றி எடுக்கும் முகமாக SDPI கட்சி கடந்த 10 ஆண்டுகளாக வீரியத்துடன் செயலாற்றி வருகின்றது என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.!

இன்றைய அரசியல் சூழலில் SDPI கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளது.

அதன் கரங்களை வலுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையையும் வல்ல இறைவன் உங்கள் கரங்களில் வழங்கி உள்ளான். ஆகவே அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள் அக்டோபர் 21 ஞாயிற்றுகிழமை அன்று திருச்சியை நோக்கி அரசியலாய் அணிதிரள்வோம் அதிகாரத்தை வென்றடுப்போம் அதிகாரத்தின் பலத்தை பெற்று சமூகத்தை பலப்படுத்துவோம்” இவ்வாறு அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகம்மது இலியாஸ்-9944997022

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter