168
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நேற்றைய தினம் உடல் நிலை பாதிக்கபட்ட நிலையில் ஒரு பெரியவர் பேருந்து நிலையத்தில் இருந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிராம்பட்டிணம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே வந்த அவர்கள் அப்பெரியவரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் இன்று காலை அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனையடுத்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்து காவலர் திரு. பாலா அவர்கள் CBD உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே நேரில் சென்று CBD நிர்வாகிகள் ஆரிஃப், அஃப்ரித், இம்ரான் ஆகியோர் அந்த முதியவரின் உடலை அதிரை பைத்துல்மால் அம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று வண்டிப்பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.