மல்லிப்பட்டினம் கட்டயபாலத்தில் இயங்கி வரும் இறால் பிளான்டில் வேலை செய்யும் கூலி தொழிலாளி ஒருவர் கடந்த 20ம் தேதி மாலை பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் அணிந்திருந்த கைலி மோட்டாரில் சிக்கி அவருடைய காலும் சிக்கி விட்டது.
பின்பு அவர் கால் முறிந்த நிலையில் மீட்டெடுக்கப்பட்டார். உடனே அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சிக்கியவர் 3 மணி நேரங்களில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே, அவருடைய காலை plastic surgery மூலம் சேர்க்க முடியும் என்று அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவர் மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்ஸில் மதுரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸை மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஹவாஜா இயக்கினார்.
3 மணி நேரத்திற்குள்ளாக மதுரை சென்றால் மட்டுமே காலை பொறுத்த முடியும். ஆனால் மிகவும் துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஹவாஜா 2.45 மணி நேரத்திலேயே மதுரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றார்.
உடனே விபத்தில் கால் முறிவு ஏற்பட்டவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் பொருத்தப்பட்டது. உயிர் காக்கும் சேவையில் துரிதமாக செயல்பட்டு ஒருவரின் கால் திரும்ப கிடைக்கும் வகையில் ஆம்புலன்ஸை வேகமாக ஓட்டிச் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் ஹவாஜாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் எஸ்டிபிஐ வழக்கறிஞர் சபியா நிஜாமிடம் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.