64
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருவதால் தமிழக சுகாதரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதே சமயத்தில் டெங்கு ஒழிப்பு தினமாகவும் இன்று(23.10.2018) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதனையொட்டி அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பொதுமக்களுக்கு அதிரை பேரூராட்சி சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி சுகாதர ஆய்வாளர் அன்பு கிருஷ்ணா கலந்துகொண்டார்.