135
அதிரை லயன்ஸ் கிளப் நடத்திய புற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9 மணிக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை கேன்சர் சென்டரை சேர்ந்த மருத்துவக்குழு பயாணாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இதில் மருத்துவ வசதிகள் கொண்ட மொபைல் வேன் நிறுத்தப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க தலைவர் பேரா.அப்துல்காதர் தலைமை வகித்தார் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான் அப்துல்ஜலீல் முகம்மது முகைதீன் அப்துல்ஹமீது பேரா.செய்யது அகமதுகபீர் ஆறுமுகசாமி பிச்சைமுத்து நிஜாமுதீன் சாரா அகமது சாகுல்ஹமீது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.