18
தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொடிய நோயான டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் டெங்கு காச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கையாக பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் ஏற்பாட்டை தரகர் தெரு பஞ்சாயத்து நிர்வாகிகள் செய்திருந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி அருந்தி பயணடைந்தனர்.