Monday, December 9, 2024

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை முஹம்மது சாது மீட்பு

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை ஆர்.கே.நகர் அருகே உள்ள நேதாஜி நகரில் நேற்று கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்கப்பட்டுள்ளது.  கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் முகமது சாதுவை   கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர். சிறுவனை தண்டையார்பேட்டையில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் போலீசார் மீட்டனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (24). இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பகுதியில் சாலையோரத்தில் துணிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பரகத் நிஷா (20). இவர்களுக்கு முகமது சாது என்ற இரண்டரை வயது மகனும், பிறந்து 15 நாளே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

முன்னதாக, நேற்று காலை வழக்கம்போல் முகமது இலியாஸ் கடைக்கு சென்றுவிட்டார். மதியம் 12 மணியளவில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த முகமது சாகீப் வெகுநேரம் ஆகியும் வராததால் பரகத் நிஷா வெளியில் வந்து பார்த்துள்ளார். அங்கு மகன் இல்லை என்றதும் அக்கம்பக்கத்து வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் யார் வீட்டுக்கும் குழந்தை செல்லவில்லை என்று தெரிந்தது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில்  சிறுவன் முகமது சாகீபை கொடுங்கையூர் அருகே போலீசார் மீட்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உ.பி. பாணியில் மாட்டிறைச்சி அரசியலை கையில் எடுக்கும் அதிரை நகராட்சி! பின்னால்...

அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு வார்டு மறுவரையரையில் சிறுபான்மை முஸ்லீம் பிரதிநிதிதுவத்தை குறைத்தது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணை தலைவர் பதவியை...

அதிரை: எல்லாமே பூஜைக்கு அப்புறம்தான்- நீரில் மிதக்கும் பகுதியை மீட்க சாக்கு...

அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக...

மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ்...

. அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது...
spot_imgspot_imgspot_imgspot_img