153
ஒரு தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தன்னுடைய அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கரோல் பார்க் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர்.
மாணவி உயிரிழந்ததை அடுத்து அவருடைய பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் தற்போது டெல்லி வந்து கொண்டு இருக்கின்றனர்.