தரகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தாயாரும், ஷபூர்கான், ஹாஜா நசுருதீன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப், தமீம் அன்சாரி ஆகியோரின் வாப்புச்சாவும், சமீர்கான் அவர்களின் உம்ம்மாவுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுதவுடன் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்