தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள IVC ஐஸ் பிளாண்ட் அருகே கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.
சாக்கடை கழிவுகள், மீன் கழிவுகள்,ஐஸ் பிளாண்டிலிருந்து வெளியேறும் கழிவுகள்,குப்பை கழிவுகள் என ஒட்டு மொத்த குப்பை கிடங்காகவும்,கழிவு நீர் தேக்கும் பகுதியாகவும் இருக்கிறது IVC ஐஸ் பிளாண்ட் அருகே.
பொதுமக்கள், வாகன ஓட்டிகளும்,பெண்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் என பலரும் பயன்படுத்தும் பிரதான சாலையாகும்,இந்த கழிவுகளின் காரணமாக வெளியேறும் துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் இருக்கும் கழிவுகளால் டெங்கு,மலேரியா,சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
இது குறித்து புளூ ஸ்டார் கடை உரிமையாளர் சுபுகான் நம்மிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் சுகாதர பணிகளை அரசு செய்தாலும் மல்லிப்பட்டிணத்திற்குட்பட்ட பகுதிகளில் எந்தவித சுகாதர பணிகளும் நடைபெறுவதில்லை, மேலும் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள IVC ஐஸ் பிளாண்ட் அருகே கழிவுநீர் செல்ல முறையான வடிகால்கள் இல்லை, இதனால் கழிவுகள் அங்கேயே தேங்கி கிடந்து சுகாதர சீர்கேட்டையும்,துர்நாற்றம் வீசுகிறது.ஆகவே இதனை உடனடியாக அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது என்று கூறினார்.