63
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தை திருமணம் தடுத்தல் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2012ல் இருந்து தஞ்சையில் செயல்பட்டு வருகிறது.மாவட்ட முழுவதும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தை திருமண தடுத்தல்,கொத்தடிமையாக இருக்கும் குழந்தைகள் மீட்டல்,குழந்தை பாலியல் அத்துமீறல் குறித்தும் கலைநிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.