தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது காலை 6 மணியிலிருந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அதிரையில் கனமழையால் டெங்குகாய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கைக்கு தேவையான தளவாட பொருட்கள், கிருமிநாசினிகள், புகைமருந்து தெளிப்பான்கள், மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது.