46
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் ஆண்டுதோறும் உலகப் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டும் 37ஆவது ஷார்ஜா புத்தகக் கண்காட்சி கடந்த 31-ம் தேதி தொடங்கி நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்புத்தக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி துபாய் வந்தார்.
துபாய் வந்த அவரை விமான நிலையத்தில் அமீரக திமுக நிர்வாகிகள் அன்வர் அலி, பழஞ்சூர் செல்வம், புதுப்பட்டிணம் சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.