Home » தண்ணீரோடு கண்ணீர்… எப்பொழுது தான் விடை கிடைக்கும்…!!

தண்ணீரோடு கண்ணீர்… எப்பொழுது தான் விடை கிடைக்கும்…!!

0 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் எரிப்புரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர்..

இந்த பகுதியில் வெகு நாட்களாகவே குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. மற்றும் மழை காலம் வந்து விட்டால் இந்த மக்களுக்கு தண்ணீரோடு கண்ணீரும் கலக்கிறது

இங்குள்ள மக்களின் முக்கிய கோரிக்கைகள்
1.மழைக்காலம் வந்து விட்டால் பிரதான சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை பயன்படுத்த முடியவில்லை.
2. குப்பைகள் அல்ல படாமல் இருகின்றது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இந்த இரு கோரிக்கைகளுமே முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வந்து விட்டால் இந்த பகுதியில் சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி காட்சி அளிக்கிறது. இந்த சாலையை பள்ளி குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இந்த சாலையை பயன்படுத்த முடியவில்லை. இதனால் வாகன ஒட்டிகளும் மிகுந்த சிறமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இதுவறையிலும் பல அதிகாரிகள் நேரில் வந்து நான் செய்து தருகிறேன் என்று வாய் சொல்லே தவிர எந்த ஒரு வேலைகளும் நடைபெறவில்லை. என்பது இந்த பகுதி மக்களின் கூற்றசாட்டாக உள்ளது.

இறுதியாக நேற்றைய தினம் அப்பகுதி இளைஞர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகள் வைத்தனர். இதை பற்றி அந்த பகுதி இளைஞர்களிடம் கேட்ட பொழுது அதிகாரிகள் எங்களிடம் பல வருடங்களாக கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்று தான் கூறுகிறார்களே தவிர செயல்களில் ஈடுபாடு இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து பிரதான சாலைியில் உள்ள மழைநீரை வெளியேற்றினர்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter