81
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பெருந்துக்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று(03/11/2018) இரவு சென்னையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இன்று(04/11/2018) அதிகாலை 03.15 மணியளவில் முத்துப்பேட்டை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
அதிகாலை நடந்த விபத்தில் துரிதிஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயங்கள் இன்றி தப்பித்து விட்டனர்.
இதனைத்தொடர்ந்து பயணிகளுக்கு மாற்றுப் பேருந்து வரவழைத்து பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.