Home » அதிரையில் உயிர் காக்கும் சேவையில் அடுத்த கட்டத்தை முன்னெடுக்கிறது CBD அமைப்பு!!

அதிரையில் உயிர் காக்கும் சேவையில் அடுத்த கட்டத்தை முன்னெடுக்கிறது CBD அமைப்பு!!

0 comment

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) யின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று 04.11.2018 மதுக்கூர் அன்னை கதிஜா ஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் K.செய்யது அஹமது கபீர் அவர்கள் தலைமை தாங்கினார், அடுத்த கட்ட பணிகள் குறித்து உரையாற்றினார்.அடுத்ததாக தஞ்சை மாவட்ட செயலாளர் N.காலித் அஹமது முன்னிலை வகித்தார்.முதலில் மதுக்கூர் நகர தலைவர் A. அஹமது முஸ்தபா அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ச்சியாக அறிக்கை வாசித்தல் தஞ்சாவூர் நகர தலைவர் S.முகமது சாலவுதீன் (எ) சாஹிம் சா, அதிராம்பட்டினம் நகர தலைவர் S. இப்ராஹிம் அலி,முத்துப்பேட்டை நகர தலைவர் S.முகமது நபில்,மதுக்கூர் நகர செயலாளர் S.நூர் முஹம்மது ஆகியோர் CBD யின் செயல்பாடுயை குறித்து அறிக்கை வாசித்தனர்.

அடுத்ததாக கலந்துரையாடல் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தீர்மானங்கள் :

1.அதிராம்பட்டினத்தில் பிப்ரவரி மாதம் மாநில தழுவிய அளவில் உயிர்காக்கும் தோழர்கள் சந்திப்பு ( Life Savers Meet ) 2019 நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2. தஞ்சாவூரில் டிசம்பர் 9 ஆம் தேதி மாநில தழுவிய அளவில் உயிர்காக்கும் தோழர்கள் சந்திப்பு ( Life Savers Meet ) 2019 நிகழ்ச்சியை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

3.CBD தஞ்சை மாவட்டம் சார்பாக அதிரையில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

4. அதிராம்பட்டினத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நகர தலைவராக S. இப்ராஹிம் அலி நகர செயலாளராக S. சமீர் அலி பொருளாளராக K.S முகமது அப்ரித் கான்.

4. தஞ்சாவூர் மற்றும் முத்துப்பேட்டை புதிய நிர்வாகம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

5. அடுத்த தஞ்சை மாவட்ட ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதியாக அதிராம்பட்டினம் நகர செயலாளர் S. சமீர் அலி நன்றியுரை ஆற்றினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter