69
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துவக்க தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மல்லிப்பட்டினம், ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகம், சம்பைப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் மாநில செயலாளர் ரியாஸ் அஹமது கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மேலும் செந்தலைப்பட்டினம் கிளை தலைவர் தோழர். யாசர் மண்மேடு கிளையில் கொடியேற்றி மாணவர்கள் மத்தியில் உறுதிமொழி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.