அதிரை தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் அழைப்பின் பெயரில் மேலத்தெரு வாசிகளின் கலந்தாலோசனை கூட்டம் தலைவர் தலைமையில் நேற்று 09.11.2018 வெள்ளி கிழமை மாலை 5:00 மணி அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெருவின் முக்கியஸ்தர்கள், TIYA நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு:
1. தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளால் கடந்த வருடங்களில் நமது மரைகாயர் மற்றும் செடியன் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இந்த வருடம் இதுவரை எடுத்து வருகிற நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினர். மேலும் இனி நடக்க வேண்டிய அனைத்து காரியங்களுக்கும் அனைவரின் ஒத்துழைப்பையும் கோரினார்கள்.
2. கடந்த 2015-ம் ஆண்டு நமது சங்க நிர்வாகம் சார்பாக நமதூர் பஞ்சாயத் போர்ட் நிவாகத்திற்கு, நமது புதுக் குளத்தில் கலக்கும் கழிநீரை தடுத்து, அபுல் கடை அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இணைக்க ஒரு வாய்க்காலும், அதன் அருகிலுள்ள பாலத்தையும் சீர் செய்து தர கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீது பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்பினர்களோ, தற்போது இருக்கின்ற அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை சங்க நிர்வாகிகள் மிகுந்த வருத்தத்துடன் சபையோருக்கு தெரிவித்தார்கள்.
3. கடந்த 2013-ம் ஆண்டு மரைக்காயர் குளத்திற்கு CMP வாய்க்காலில் தண்ணீர் கொண்டு வரும்போது, சிதலமடைந்த வாய்க்காலை சீர் செய்ய வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தோம். அதற்கு 10 பைப்புகள் வாங்கி தாருங்கள் என பேரூராட்சி தலைவர் கேட்டார். அதனை உடனே வாங்கி கொடுத்தோம். ஆனால் இன்றோடு 5 வருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரை அந்த வாய்க்கால் பேருராட்சி நிர்வாகம் சீர் செய்து தரவில்லை என்ற தகவலையும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
4. கடந்த காலங்களிலும் சரி அல்லது அண்மை காலங்களிலும் சரி குளங்கள் சீரமைப்பை பொறுத்தவரை நமக்கு நாமே சீரமைத்து வந்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களிலும் குளங்களுக்கு தேவையான் பணிகளை நமக்கு நாமே சீரமத்துக் கொள்வோம் என ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இப்படிக்கு,
தாஜுல் இஸ்லாம் சங்கம், அதிராம்பட்டினம்.