Home » அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் !

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் !

0 comment

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டும், மாவட்ட சிறப்பு சேவை தினமான நவம்பர் 14ம் தேதியை முன்னிட்டும் அதிரை முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா நாளை புதன்கிழமை நடைபெறுகிறது.

முகாம்கள் தொடர்பான முழு தகவல் :

1. உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அதிரை லயன்ஸ் சங்கம், தீன் மெடிக்கல்ஸ் மற்றும் தீன் மருத்துவ ஆய்வகம் இணைந்து நடத்தும் இலவச நீரிழிவு/சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்

நாள் : 14.11.2018 நேரம் : காலை 9 மணி முதல்
இடம் : பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்.

2. அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை முகாம்

இடம் : எண் 1, அரசு துவக்கப் பள்ளி, அதிராம்பட்டினம்.

3. அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நோக்கில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்தல்

இடம் : பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்.

4. அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

இடம் : பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்.

5. அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் சிறப்பு திட்டமான பசித்தோருக்கு உணவளித்தல் யோகம் திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு விருந்து

இடம் : ஜக்கரியா காம்ப்ளக்ஸ், அதிராம்பட்டினம்.

6.அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா

இடம் : அரசு மருத்துவமனை, அதிராம்பட்டினம்[பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் வழங்குதல்]

இடம் : அரசு ஊ.ஒ. துவக்கப்பள்ளி, அதிராம்பட்டினம்[பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்குதல்]

7. அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்று நடுதல் , கூண்டுகள் வைத்து பராமரித்தல்

இடம் : எண் 1, அரசு துவக்கப்பள்ளி, அதிராம்பட்டினம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter