அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டும், மாவட்ட சிறப்பு சேவை தினமான நவம்பர் 14ம் தேதியை முன்னிட்டும் அதிரை முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கும் விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அதிரை லயன்ஸ் சங்கம், தீன் மெடிக்கல்ஸ் மற்றும் தீன் மருத்துவ ஆய்வகம் இணைந்து நடத்தும் இலவச நீரிழிவு/சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம், பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை முகாம், டெங்கு காய்ச்சலை தடுக்கும் நோக்கில் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகித்தல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்பு கசாயம் வழங்கல், அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் சிறப்பு திட்டமான பசித்தோருக்கு உணவளித்தல் யோகம் திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு விருந்து, குழந்தைகள் தின விழா, மரக்கன்று நடுதல் , கூண்டுகள் வைத்து பராமரித்தல் என பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கும் முகாம்கள் இன்று நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.