297
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுக்கூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெரியக்கோட்டை, தாமரங்கோட்டை, முத்துப்பேட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளுக்கு (15-11-2018) நாளை விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் நாளை மின் தடை ரத்து என்று பரவிவருகிறது.
அதிராம்பட்டினம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் மின் தடை ரத்து குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வான அறிவிப்பு வெளியிடவில்லை என்றும் மின் தடை ரத்து குறித்து நாளை காலை 8 மணியளவில் அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார்.