வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை வியாழக்கிழமை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கைகளை கூடாரம் அமைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் பேராவூரணி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உட்பட கிராமங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதிராம்பட்டினத்தில் தஞ்சாவூர் மாவட்ட பாதுகாப்பு கண்காணிப்பாளர் SP செந்தில்குமார் தலைமையில் 100க்கு மேற்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் வந்தடைந்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரை மக்களுக்கு முன்னெச்சரிக்கைக்கான அறிவுறுத்தல் கூறியுள்ளார். அது தொடர்பான வீடியோ இதோ :