இரவு நேரத்திலும் பேரூராட்சியின் சுத்தம் செய்யும் பணி…
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கஜா புயல் அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை பலத்த சேதத்தை சந்தியுள்ளது. இதனால் மரம், செடி கொடிகள் வேரோடு சாய்ந்து சின்னாபின்னமாக்கியது. இதனால் அதிரை உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.
இன்னும் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏதும் சரிவர கிடைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அதிரை பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிடக்கும் மரம் செடி கொடிகள் பொதுமக்களுக்கு இடையுறு தரும் வகையில் இருப்பதால் தஞ்சாவூர் பேருராட்சி துறை இயக்குனர் தலைமையில் இன்று காலை முதல் தொடங்கி சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வெளியூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருராட்சிக்களுக்கு சொந்தமான சுத்தம் செய்யும் வாகனம் மற்றும் ஜேசிபிகளுடன் ஊழியர்களும் வந்துள்ளனர்.
அதிரை பகுதி மக்களின் நலன் கொண்டு இன்று காலை முதல் தொடங்கி இரவு என்று பாராமல் முழு வீச்சில் இப்பணியை விரைந்து செயல்படுத்திய தஞ்சை மாவட்ட பேரூராட்சி துறை இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
இதில் அதிரை பேருராட்சி செயலாளர் ரமேஸ் , துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் உடன் இருந்து வருகின்றனர்.