Home » எங்களின் நலனை விட அவர்களின் நலனே மேல்!! நெகிழ வைத்த CBD!!

எங்களின் நலனை விட அவர்களின் நலனே மேல்!! நெகிழ வைத்த CBD!!

0 comment

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவான கஜா புயல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அதிரையை மணிக்கு 111கிமி வேகத்தில் தாக்கியது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால் மரம், செடி கொடிகள் வேரோடு சாய்ந்து அதிரை உருக்குலைந்து காட்சி அளிக்கிறது.

இன்னும் குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏதும் அரசின் தரப்பிலிருந்து சரிவர கிடைக்காததால் தன்னார்வலர்கள் மற்றும் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே அரசை மிஞ்சும் அளவுக்கு களப்பணியாற்றி வருகிறார்கள்.

அரசின் சார்பிலேயே அதிரையில் புயல் உதவி மையம் அமைக்காத போது கடந்த ஒரு வாரமாக அல் அமீன் பள்ளியில் முகாமிட்டிருக்கும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் CBD தன்னார்வலர்கள் உதவி மையம் அமைத்து அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிரை பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிடக்கும் மரம் செடி கொடிகள் பொதுமக்களுக்கு இடையுறு தரும் வகையில் இருப்பதால் தஞ்சாவூர் பேருராட்சி துறை இயக்குனர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக தொடங்கி சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வெளியூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருராட்சிக்களுக்கு சொந்தமான சுத்தம் செய்யும் வாகனம் மற்றும் ஜேசிபிகளுடன் ஊழியர்களும் வந்துள்ளனர்.

இதே போல் மின்கம்பங்களும் கஜா புயலின் கோர தாண்டவத்தால் அடியோடு சாய்ந்து அதிரை முழுவதும் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனை சரிசெய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்து அதிரையில் முகாமிட்டு மிக தூரிதமாக வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனால் அதிரையில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழ்நிலையில் குடிநீர் மக்களுக்கு வழங்குவதில் அரசுக்கே கடும் சவால் இருப்பதால், வெளியூரிலிருந்து அதிரைக்கு உதவ வந்துள்ள ஊழியர்களின் உடல் நலன் கருதி அவர்களுக்காக அதிரை CBD அமைப்பினரின் பெறும் முயற்சியால் அதிரை பேரூராட்சிக்கு அவர்கள் பணிக்கு செல்லும் போது வாகணத்தில் எடுத்து செல்ல வசதியாக 50 குடிநீர் மூட்டைகளும் மின்சார ஊழியர்கள் தங்கிருக்கும் லாவன்யா மற்றும் சாரா மண்டபத்திற்க்கு சுமார் 60 குடிநீர் மூட்டைகள் வழங்கப்பட்டது.

இதே போல் சாதி மத பேதமில்லாமல் அதிரையிலுள்ளஅனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் ஒவ்வொரு தளங்களுக்கும் 60 லிட்டர் குடிநீர் கேண் மற்றும் குடிநீர் மூட்டைகள் அதிரை CBD சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மற்றவர்களின் நலன் கருதி குடிநீர் வழங்கிய அதிரை CBD உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் CBD உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.

-ஆக்கம்
முஸ்லிம்மலர் ஹசன் (Amsan)
அதிரை எக்ஸ்பிரஸ்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter