130
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கஜா புயல் சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கிட மத்திய குழு இன்று(25.11.2018) வருகை தர இருக்கின்றனர்.
மத்திய குழு அதிகாரிகளின் வருகையையொட்டி பல ஆண்டுகளாக கரடுமுரடாக இருந்த பள்ளிவாசலை ஒட்டிய சாலையை சீரமைத்தல்,கிருமிநாஷினி தெளிப்பது,கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒருவாரம் ஆகியும் அகற்றப்படாத மரங்களை அகற்றுவது என பல தில்லாலங்கடி வேலைகளை இங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த பணிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடக்காத பணிகள் இன்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது.யாரை ஏமாற்ற இந்த களப்பணி என்று பொதுமக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர்.