74
தமிழக அரசியல் போன்று அதிராம்பட்டினம் பேரூராட்சியிலும் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அதிரையை சூறையாடிய கஜா புயல் பாதிப்புகளின் போது அதிமுக, திமுக செயல்பாடுகள் குறித்து தனித்தனியாக அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் வாக்களித்த 85 பேரில் 99% பேர் அதிமுக மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதேசமயம் 257 பேரில் 26% பேர் திமுக செயல்பாடு ஓகே என்றும் 74% வேஸ்ட் எனவும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் அதிரையின் இளைய சமூகம் அதிமுக, திமுகவுக்கு மாற்றை விரும்புவதாக உள்ளூர் அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அந்த மாற்று யார்? விரைவில்… எதிர்பார்க்கலாம்.