45
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவ அமைப்பினர் பள்ளி மாணவர்கள் ஸ்கூல் பேக்,நோட்டு புத்தகங்கள் வழங்கினர்.
கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நிர்மூலமாகி போனது டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கை.இந்த பாதிப்பில் பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகங்களையும் விட்டு வைக்கவில்லை.இதன் காரணமாக கடந்த டிசம்பர் 1 அன்று மல்லிப்பட்டிணம் பகுதி மாணவ,மாணவிகளுக்கு ஸ்கூல் பேக்,பள்ளி உபகரண பொருட்கள் இலவசமாக வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் ரியாஸ் அகமது பங்கேற்று வழங்கினார்.