கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு 5000 இழப்பீடு வழங்கவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 4.12.2018 அன்று காலை 9 மணிக்கு பட்டுக்கோட்டையில் தமிழக தென்னை உழவர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பிஆர் பாண்டியன் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.
இப்போராட்டத்தில் திரளான மக்கள் பங்கெடுத்து கோரிக்கை வெற்றி பெற செய்திட வேண்டும் என்று ராஜிவ் காந்தி பஞ்சாய் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் கோரிக்கை விடுத்துள்ளார்.