Home » பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தமுமுக சார்பில் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம்…அதிரை தமுமுகவினர் உட்பட பலர் பங்கேற்பு !

பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தமுமுக சார்பில் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம்…அதிரை தமுமுகவினர் உட்பட பலர் பங்கேற்பு !

0 comment

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த 425 ஆண்டுகள் பழமையான பாபரி மஸ்ஜித் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஹெச்பி கரசேவர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்தியாவின் இறையாண்மையை உலக அளவில் கேலிக்கூத்தாக்கிய இந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் அப்போது நடந்த பெரும் கலவரத்துக்கும் காரணமாக இருந்தது.

இந்நிலையில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான இன்று(டிசம்பர்-6) தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஃபாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காரைக்காலில் தமுமுக சார்பில் ஃபாசிச எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அதிரை தமுமுகவினர் இன்று காலையிலேயே வேன்களில் காரைக்கால் சென்றனர். மேலும் காரைக்காலில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரை தமுமுகவினர் உட்பட ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter