கஜா புயலைத் தொடர்ந்து அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புயலின் தாக்கத்திலிருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், கொடிய நோய்கள் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிரையின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அக்காய்ச்சலால் கடுமையான உடம்பு வலி, கடுமையான காய்ச்சல், மூட்டுபகுதி மற்றும் இரண்டு காலும் வீங்குவது போன்ற அறிகுறிகள் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆகையினால் அதிரை மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை பார்க்கவும். தாமாக எந்த ஒரு மருந்துகளையும் உட்கொள்ள வேண்டாம். மேலும் நம் வீட்டையும், நம் சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறையின் முக்கிய அறிவுறுத்தல் :
டெங்கு காய்ச்சல்
இது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சலாகும்.
எப்படி பரவுகிறது?
நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது.
கொசு உற்பத்தியாகும் இடம்
டயர், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், திறந்த கிணறு, பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் கப்களில் தேங்கும் நீரில் உருவாகிறது. ஏடிஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. ஏடிஸ் கொசு பகலில் மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது.
காய்ச்சலின் அறிகுறிகள்
காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி, எலும்பு வலி போன்றவை முக்கியமான அறிகுறி களாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டணுக்களை அழித்துவிடும் தன்மை உடையது. ரத்த தட்டணுக் களின் எண்ணிக்கை குறையும் போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.
கவனிக்க வேண்டியவை
டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சைப் பெற வேண் டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட் கொண்டாலோ, போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.
எவ்வாறு குணப்படுத்தலாம்?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை யும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற் றும் மருத்துவ மனையில் கொடுக்கப் படும் உயிர்காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவை யான அளவு கொடுக்க வேண்டும்.