Home » காய்ச்சலா? அழையுங்கள் 104 !!

காய்ச்சலா? அழையுங்கள் 104 !!

0 comment

அரசின் சுகாதாரத்துறை சார்பில் கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணான 104ஐ அறிமுகம் செய்துள்ளன.

இதில் காய்ச்சல்,டெங்கு,
மலேரியா, மன நலம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க வழிவகை செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும்.

தற்போது அதிரையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 5நபர்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இவ்வேளையில் இது குறித்த தகவலை நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் மாநில சுகாதாரத்துறை கவனத்திற்கு எடுத்து சென்றன.

அதன் பேரில் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள இன்று (08/12/18) காலை முதல் 20நபர்கள் கொண்ட மருத்துவ குழு அதிரையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் மருத்துவ குழுக்களின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கஜா புயலில் விழுந்த மரங்கள், ஓடுகள் கீற்றுகள் இவைகளில் தேங்கியுள்ள மழை நீரில்தான் ADS கொசு உற்பத்தியாகி இவ்வாறன நோய்கள் பரவி வருவதாக கூறுகிறார்.

மேலும் பொதுமக்கள் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தற்போது ஏற்பட்டு உள்ள குடிநீர் பிரச்சனைகளால் தண்ணீரை சேமித்து வைக்கும் மக்கள் அதனை துணி கொண்டு நன்றாக மூடி வைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter