41
அதிரையில் கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் கஜா புயல் வீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. அதிரை மக்கள் பலர் தங்கள் வீடுகளை பறிகொடுத்தனர். புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிரையை மறுசீரமைப்பு செய்யவும், வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்டிகொடுக்கும் நோக்கிலும் அதிரை கஜா புயல் மறுசீரமைப்பு கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு அதிரை பைத்துல்மால் வளாகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், முஹல்லா நிர்வாகிகள், அரசியல் இயக்க நிர்வாகிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.