கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. புயலால் மரங்கள், கூரை வீடுகள், மீனவர்களின் படகுகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுப்பட்டினம் கிளை எஸ்டிபிஐ கட்சியினர், பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராஜை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் புதுப்பட்டினத்தில் அரசின் நிவாரண பொருட்கள் வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இதில் எம்எம்ஏ தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ கோவிந்தராஜ், அரசு சரியாக செயல்படுகிறது, சில அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்துகொள்கிறார்கள் என்றும் இதுகுறித்து அப்பகுதி விஏஓ, ஆர்.ஐ மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று எஸ்டிபிஐ கட்சியினரிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார்.