Home » தெலுங்கானாவிலும் போச்சு… தென்னிந்தியாவில் எங்குமே தாமரை மலராது போல !

தெலுங்கானாவிலும் போச்சு… தென்னிந்தியாவில் எங்குமே தாமரை மலராது போல !

0 comment

தெலுங்கானாவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கானா ராஷ்திரிய சமிதி கட்சி மொத்தமுள்ள 120 தொகுதிகளில் 88 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், AIMIM கட்சி 7 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் பாஜக கட்சி அங்கு மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை வந்த முடிவுகளின்படி தென்னிந்தியா பாஜகவிற்கு எப்போதும் சிம்ம சொப்பனம்தான் என்று நிரூபித்து இருக்கிறது. அகண்ட பாரத் கனவில் இருக்கும் பாஜகவிற்கு தென்னிந்தியா எப்போதும் எட்டா கனியாகவே உள்ளது. தெலுங்கானா மூலம் உள்ளே வரலாம் என்று நினைத்த பாஜகவிற்கு இது பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

எப்போதும் பாஜக சார்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்தால் அங்கு பாஜக கட்சி வெற்றிபெறும். குஜராத் சட்டமன்ற தேர்தலில் யோகி பிரச்சாரம் செய்த அனைத்து தொகுதியிலும் பாஜக வென்றது. ஆனால் தென்னிந்தியா இதிலும் வித்தியாசம் காட்டியுள்ளது. தெலுங்கானாவில் யோகி பிரச்சாரம் செய்த பகுதிகளில் பாஜக படுமோசமான தோல்வியை நோக்கி செல்கிறது.

அதேபோல் ஹைதராபாத்தில் பாஜக மிக மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறது. முக்கியமாக பாஜகதான் ஹைதராபாத் பெயரை மாற்றுவோம், தேர்தலில் வெற்றி பெற்றால் ஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் மிக மோசமான பின்னடைவை பாஜக சந்தித்து உள்ளது.

அதேபோல் பாஜக மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் இதே முடிவைதான் இதற்கு முன் சந்தித்தது. தமிழகத்திலும், கேரளாவிலும் பாஜகவிற்கு இடம் இல்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் கோட்டை வலுவாக நிற்கிறது. கர்நாடகாவில் கைக்கு எட்டிய ஆட்சி வாய்க்கு எட்டவில்லை. தற்போது தெலுங்கானாவில் மாபெரும் தோல்வியை பாஜக பெற்றுள்ளது. இதனால் தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter