கடந்த மாதம் 16ம் தேதி அதிகாலையில் தமிழக டெல்டா மாவட்டங்களை கஜா என்னும் புயல் புரட்டிப்போட்டு விட்டுச் சென்றது. இன்னமும் கூட மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் அரசு நிவராண பொருட்கள் அறிவிப்பானை வெளியிட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.
மேலும் அதிரை மற்றும் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் இடைக்கால நிவாரணம், குடியிருப்பு சீரமைப்பு,படகுகளுக்கு இழப்பீடு,விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் ஏதும் வழங்கிடாமல் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்கை காட்டி வருகின்றனர்.
அதேப்போல் மல்லிப்பட்டிணம்,அதிராம்பட்டினம் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.மற்ற பெரும்பாலான பகுதியை பார்வையிடாமல் அதிகாரிகள் புறக்கணித்து சென்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும் தன்னார்வ அமைப்புகளும்,இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தான் தொடர்ந்து நிவாரண பொருட்கள் போன்றவை வழங்கி வருவதாகவும் கூறினர்.
ஆகவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் இதனை கருத்தில் கொண்டு அரசு அறிவித்த நிவாரண பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.