61
கடந்த மாதம் 15ஆம் தேதி நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான மரங்கள், கூரை வீடுகள் என அனைத்தும் சேதமடைந்தன.
புயலால் சேதமடைந்த வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயக்கங்களும், தன்னார்வ தொண்டர்களும் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க உதவி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிரை நகர PFI சார்பில் புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் சீரமைத்து கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அதிரையில் 25 வீடுகள் PFI சார்பில் சீரமைத்து கொடுக்கப்பட உள்ளது. அதனுடைய வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.