Home » அதிரை அருகே ம.ஜ.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்..!! காவல் துறை அலட்சியம்..!

அதிரை அருகே ம.ஜ.க. நிர்வாகிகள் மீது கொலைவெறி தாக்குதல்..!! காவல் துறை அலட்சியம்..!

0 comment

தஞ்சை மாவட்டம் மழைவேனிற்காடு என்ற பகுதியில் கடந்த 09.12.2018 அன்று சேக்தாவூத் என்பவரின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த தகவல் அறிந்து அதிரையை சேர்ந்த S.M. அப்துல் சமது (ம.ஜ. க. நகர செயலாளர்) அவர்களும், அவர்களுடைய சகநிர்வாகிகளும் வாகனத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடந்த 11.12.2018 அன்று மதுக்கூரிலிருந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றி வந்த நிலையில் விபத்துக்குள்ளான வாகன உரிமையாளர் ம.ஜ.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு அழைத்துள்ளார். பிறகு இருவரும் சம்பவ இடத்தில் சந்தித்த நிலையில் வாகனம் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அருகில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர். விசாரித்த நிலையில் அந்த மக்கள் இவர்களை ஆபாசமாக திட்டி கட்டை, அரிவாள், கம்பி போன்ற ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு காயமடைந்த ம.ஜ.க. நிர்வாகிகள் அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி 11.12.2018 அன்று அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட ம.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter