Friday, April 19, 2024

கொட்டும் மழையில் தமுமுகவின் கண்டன பொதுகூட்டமும், பல தீர்மானங்களும்..!

Share post:

Date:

- Advertisement -


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் சுமார் 6:30மணிக்கு ஆரம்பம் ஆகி இரவு 10:00 மணியளவில் முடிவுபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மழை பெய்த நிலையிலும் மக்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

விரிவான செய்தி:-
அதிரையில் இன்று(27/09/2017) புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,M.R. கமாலுதீன் அவர்கள் தலைமைதாங்கினார்,M. இத்ரீஸ் அஹமது அவர்கள் வரேவற்புரை ஆற்றினார்.
இந்த பொதுக்கூட்டம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள்:-

1.ரோஹிங்கிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

2.நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரி தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

3.அதிரையில் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் வைகப்பட்டது.

4.அதிரை ECR சாலையில் உள்ள சட்டவிரோத மதுபான கடையை மூடக்கோரியும் , அதற்க்கு நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானம் வைக்கப்பட்டது.

5.அதிரை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் மிகவும் அமோகமாக நடைபெறும் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா போன்றவைகள் அமோக வியாபாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

6.M.S.நகர் பகுதி மற்றும் பிலால் நகர் பகுதிகளில் சுகாதார சீர்கேடு மற்றும் தெருவிளக்கு எரியாதத்தை தக்க அலுவளர்க்கு தகவல் தெருவித்தால் டீ குடிக்க காசு இல்லை நாங்கள் எங்கே சரிசெய்வது என்பதை குறியும் அப்பகுதியில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறுதியாக தீர்மானம் வைகப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு S.அஹமது ஹாஜா,M.பாவாஸ் கான்,S.ஷேக் மொய்தீன்,M.ஜஃபருல்லாஹ்,S.S.முஹம்மது ஷேக்காதி,A.சலீம்,M.O.செய்யது முஹம்மது புஹாரி,R.செய்யது புஹாரி,R.M.நெய்னா முஹம்மது,S.முஹம்மது யூசுஃப்,S. சாகுல் ஹமீது, ல்J.அப்துல் ஹக்கீம்,Er. A.முஹம்மது இல்யாஸ்
முன்னிலை தங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில்
ப. அப்துல் சமது, (மாநில பொது செயலாளர்,மனிதநேய மக்கள் கட்சி) அவர்கள் கண்டன உரையாற்றினார்.

வழக்கறிஞர் I.M. பாதுஷா,
(மாநில அமைப்பு செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி)மற்றும்
பழனி பாரூக்,
(கழக பேச்சாளர்) ஆகியோறும் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மரைக்கான் (எ) அப்துல் கஃபூர்,
(U.S.A. த.மு.மு.க பொறுப்பாளர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...