தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதிரையில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக பிரசவ பிரிவு ஏற்படுத்தபட்டு, தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.
இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மாதாந்திர தடுப்பூசிகள் இலவசமாக போட வேண்டும் என்பது சுகாதாரத்துறை கட்டுப்பாடு .
ஆனால் இந்த விதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிரையில் பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் ஏழை மக்களிடம் கராராக ₹50 ரூபாய் ரொக்கத்தை கறப்பதாக புகார் எழுந்துள்ளன.
இதுகுறித்து தலைமை மருத்துவரின் பார்வைக்கு சென்றதா? என்ற தகவல் இல்லாத நிலையில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கையூட்டு பெரும் வகையிலான வீடியோ ஆதாரங்களுடன் இருப்பதால் இப்பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும்.