52
அதிரை ஈசிஆர் சாலையில் மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதிரை-மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையில் ரயில்வே கேட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்த அம்பாசிடர் கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மின்கம்பத்தின் மீது மோதியது.
இதனால் அம்மின்கம்பம் காரின் மீது முறிந்து விழுந்தது. இவ்விபத்தில் கார் ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பலத்த காயமடைந்த அந்த ஓட்டுநர் அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிராமபட்டினம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.