தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மல்லிப்பட்டிணம்.இங்கு பல குடியிருப்புகள் தரைமட்டமாகிவிட்டன.மாநிலம் முழுவதும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு SDPI கட்சியின் சார்பில் வீடுகள் புணரமைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 வீடுகள் கட்டி தரப்படும் என்று மாநில தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
அந்த அறிவிப்பின் எதிரொலியாக SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட,நகர மற்றும் கிளை நிர்வாகிகளின் மேற்பார்வையில் வீடுகள் புணரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.