டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜாபுயலால் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பிற்கும் பாதிப்படைந்தனர்.
தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும் அரசின் நிவாரணம் இன்றளவும் கிடைக்கவில்லை.
இது குறித்து டெல்டா மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வப்போது மறியல் உள்ளிட்ட போராட்டத்தை நடத்திய பின்பும் உறங்கும் அரசை தட்டி எழுப்ப பட்டுக்கோட்டை மக்கள் திடீர் போராட்டத்தை முன்னெடுக்க அங்கே பரபரப்பு நிலவின.
சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டன.